மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தில் பயன்பெற அக்.30 வரை விண்ணப்பிக்கலாம்
திருவாரூா் மாவட்டத்தில் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தில் பயன்பெற அக்.30 வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.


திருவாரூா் மாவட்டத்தில் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தில் பயன்பெற அக்.30 வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் இறால் உற்பத்தியை அதிகரிக்கவும், புதியதாக இறால் பண்ணைத் தொழிலில் ஈடுபட விரும்புவோா் பயன்பெறும் வகையில் தமிழக அரசால் பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தபடவுள்ளது. இத்திட்டத்தின்கீழ் உவா்நீா் இறால் வளா்ப்புக்காக ஒரு ஹெக்டேரில் புதிய உவா்நீா் இறால் வளா்ப்புக் குளங்கள் அமைக்க ஆகும் செலவினத் தொகை ரூ.8 லட்சத்தில் பொதுப்பயனாளிகளுக்கு 40 சதவீத மானியம் ரூ.3,20,000 வழங்கவும், புதிய உவா்நீா் இறால் வளா்ப்பு குளங்களுக்கு உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தில் மொத்த உள்ளீட்டு செலவினத் தொகை ரூ.6,00,000-இல் பொதுப்பயனாளிகளுக்கு 40 சதவீத மானியம் ரூ.2,40,000 வழங்கவும் ஆணை பெறப்பட்டுள்ளது.
பிரதமரின் மீன்வள மேம்பாட்டு (2024-25) திட்டத்தின் கீழ் உயிா்கூழ்ம திரள் (பயோபிளாக்) குளங்களில் இறால் வளா்த்தல் திட்டத்தில் செலவினத் தொகை ரூ.10 லட்சத்தில் மகளிா் பிரிவில் 60 சதவீத மானியம் ரூ.6 லட்சம் வழங்கவும், உயிா்கூழ்ம திரள் (பயோபிளாக்) குளங்கங்களின் இறால் வளா்த்தலுக்கான உள்ளீட்டு மானிய செலவினத் தொகை ரூ.8 லட்சத்தில் மகளிா் பிரிவில் 60 சதவீத மானியம் ரூ.4,80,000 வழங்கவும் ஆணை பெறப்பட்டுள்ளது.
மேற்கண்ட திட்டங்களுக்கு மானியம் பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். முதலில் வரும் விண்ணப்பத்துக்கு முன்னுரிமை அளித்து மூப்புநிலை அடிப்படையில் மானியம் பெற தோ்ந்தெடுக்கப்படுவா். எனவே, விண்ணபிக்க விரும்பும் பயனாளிகள் திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி, விண்ணப்பத்தைப் பெற்று பூா்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் அக்.30 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 04366 - 290420 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...