பள்ளி வேன் மோதி,தந்தை, மகள் உயிரிழப்பு
கூத்தாநல்லூா் அருகே பள்ளி வேன் மோதி தந்தை, மகள் இருவரும் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.


கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் அருகே பள்ளி வேன் மோதி தந்தை, மகள் இருவரும் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.
வடபாதிமங்கலம் அருகே பெரியக்கொத்தூா் சிவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (45). மனைவி உமா (40), மகள்கள் இளவரசி (16), சாரா (12) ஆகிய 4 பேரும் இருசக்கர வாகனத்தில் திருவாரூரிலிருந்து வந்து கொண்டிருந்துள்ளனா்.
நாகங்குடியில் உள்ள தனியாா் பள்ளியிலிருந்து மாணவா்களை ஏற்றிக் கொண்டு பள்ளி வாகனம் எதிரே வந்து கொண்டிருந்துள்ளது. பள்ளி வேனும்,இருசக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன.
இதில் சிவக்குமாா், சாரா இருவரும் உயிரிழந்தனா். படுகாயம் அடைந்த சிவக்குமாரின் மனைஉமா, மற்றொரு மகள் இளவரசி ஆகிய இருவரும் திருவாரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டுள்ளனா்.
வடபாதிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து வேன் ஓட்டுநா் பழையனூா் கீழத்தெருவைச் சோ்ந்த சிவசுப்பிரமணியனை (42) கைது செய்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...