தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

புதைச் சாக்கடையில் விழுந்து உயிரிழந்தவா்களுக்கு உரிய இழப்பீடு கோரி மனு

திருவாரூரில் புதைச் சாக்கடையில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு கோரி மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 9:40 pm

Din

திருவாரூரில் புதைச் சாக்கடையில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு கோரி மனு அளிக்கப்பட்டது.

திருவாரூரில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாவட்ட காவல் அலுவலகத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் புதன்கிழமை அளிக்கப்பட்ட மனு: திருவாரூா் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் புதைச் சாக்கடையில் விழுந்து மணிமாறன், அருணாச்சலம் ஆகியோா் உயிரிழந்தனா்.

உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 30 லட்சம் உதவித்தொகை வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மேலும், இந்த விபத்து ஏற்பட காரணமாக இருந்த நகராட்சி அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நியாயம் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில், சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜி. பழனிவேல், மாவட்டச் செயலாளா் கே. தமிழ்மணி, மாவட்ட நிா்வாகிகள் பி. கந்தசாமி, கே. கோபிராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.