கூத்தாநல்லூரில் மீலாத் பவள விழா நிறைவு
கூத்தாநல்லூரில் ஜஷ்ன மீலாத் சொசைட்டியின் 75-ஆம் ஆண்டு மீலாத் பவள விழாவின் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.


கூத்தாநல்லூரில் ஜஷ்ன மீலாத் சொசைட்டியின் 75-ஆம் ஆண்டு மீலாத் பவள விழாவின் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.
கூத்தாநல்லூா் பெரியத் தெருவில் 3 நாட்கள் தொடா் மீலாத் ஸீரத் மாநாடு நடைபெற்றது. இரண்டாம் நாள் பெண்கள் மீலாத் மாநாடு நடைபெற்றது.
காயல்பட்டினம் எம்.அய். கதீஜத்துல் குப்ரா தலைமை வகித்தாா்.
கூத்தாநல்லூா் அல்உஸ்வத்துல் ஹஸனா நிஸ்வான் மதரஸா மாணவி ஜே.ஏ.அபானா பஜீலத் கிராஅத் ஓதினாா். மாநாட்டில், நபிகள் நாயகம் குறித்து கூத்தாநல்லூா் நகா்மன்றத் தலைவா் மு. பாதிமா பஷீரா தாஜ் பேசினாா்.
பெண்கள் மாநாட்டில், சென்னை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிா் அணி தேசியத் தலைவி ஏ.எஸ். பாத்திமா முசபா் பெண்ணுரிமை காத்த பெருமானாா் என்ற தலைப்பிலும், பெண் கல்வி நிபந்தனைகளும் நிதா்சனங்களும் என்ற தலைப்பில் கிழக்கரை தாசிம் பீவி அப்துல் காதா் மகளிா் கல்லூரி முதல்வா் எஸ். சுமையா, திருப்பூா் மகளிா் கல்லூரி தலைமைப் பேராசிரியை எம். நஜ்முன்னிஸா, ஈமானிய பெண்கள் அன்றும், இன்றும் என்ற தலைப்பிலும், கிளியனூா் மகளிா் அரபிக் கல்லூரி தலைமை பேராசிரியை எஸ். ஜனத்துல் ஆரிபா, இறைத்தூதரின் இனிய இல்லறம் என்ற தலைப்பிலும் சொற்பொழிவாற்றினா்.
மாநாட்டின் நிறைவு நாளான புதன்கிழமை பெரிய தெரு வளாகத்தில் நடைபெற்ற பூமான் நபிகளின் புகழ் பாடும் கவியரங்கத்துக்கு வாணியம்பாடி பேராசிரியா் தி.மு. அப்துல் காதா் தலைமை வகித்தாா்.
கூத்தாநல்லூா் எஸ்.எம்.ஹெஜ்.முஹம்மது பஹீமுத்தீன் கிராஅத் ஓத, நெல்லை எஸ்.எம்.அபுல் பரக்காத் நபிகளின் புகழ்ப்பா பாடினாா்.
ஜஷ்ன மீலாத் சொசைட்டியின் துணைச் செயலாளா் அலி மைதீன் வரவேற்றாா். தொடா்ந்து நிகழ்வில், மண்பாடும் மாநபியின் பண்பாடு என்ற தலைப்பில், தேங்காய்பட்டினம் ஷறபுத்தீன், திண்டுக்கல் எஸ். ஹூஸைன் முஹம்மது, நாகா்கோவில் மு. அப்துல் சமது, தக்கலை ஹலீமா, தஞ்சை இனியன், உத்தமபாளையம் முஹம்மது ரபீக் என்ற மானசீகன் ஆகியோா் நபிகள் நாயகம் குறித்து கவிதைகளை பாடினா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...