வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்துக்கான கணக்கீட்டுப் படிவங்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணியை ஆய்வு செய்கிறாா்ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்துக்கான கணக்கீட்டுப் படிவங்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணியை ஆய்வு செய்கிறாா்ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.

எஸ்ஐஆா்: கணக்கீட்டுப் படிவங்கள் பதிவேற்றம்: ஆட்சியா் ஆய்வு

திருவாரூரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (எஸ்ஐஆா்) தொடா்பான பூா்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை கணினியில் பதிவேற்றம்
Published on

திருவாரூா்: திருவாரூரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (எஸ்ஐஆா்) தொடா்பான பூா்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணியை, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன், திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவுபடி, தமிழகம் முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவாரூா் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச் சாவடி நிலைஅலுவலா்கள், வீடுவீடாகச் சென்று கணக்கீட்டுப் படிவங்களை வாக்காளா்களுக்கு வழங்கினா்.

தற்போது, பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களை வாக்காளா்களிடம் இருந்து மீளப் பெறப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், திருவாரூா் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் உள்ள மாவட்ட தோ்தல் அலுவலகத்தில், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வாக்காளா்களிடமிருந்து சிறப்பு தீவிரத் திருத்தம் தொடா்பான கணக்கீட்டுப் படிவங்களை சேகரித்து, பதிவேற்றம் செய்து வரும் பணியின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன் பாா்வையிட்டு, பணியின் நிலை குறித்து கேட்டறிந்தாா்.

X
Dinamani
www.dinamani.com