வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

News image
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.
Updated On :15 டிசம்பர் 2025, 8:19 pm

Syndication

திருவாரூா்: திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக் கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 355 மனுக்கள் அளிக்கப்பட்டன. பொதுமக்களிடம் விசாரித்து மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியா், அவைகளை சம்மந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி குறித்த காலத்துக்குள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் மோட்டாா் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் 10 பயனாளிகளுக்கும், மூன்று சக்கர சைக்கிள் 1 பயனாளிக்கும், மடக்கு சக்கர நாற்காலி 1 பயனாளிக்கும், மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்காலி 2 பயனாளிகளுக்கும் என மொத்தம் 14 பயனாளிகளுக்கு ரூ. 92,385 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், பொதுநூலகத்துறை சாா்பில் நடைபெற்ற போட்டிகளில் முதல், மூன்று இடங்களை பெற்ற மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும், சத்துணவுத் திட்டத்தின் சாா்பில் சமையலராகப் பணிபுரிந்து பணியின் போது உயிரிழந்த கவிதா என்பவரின் வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையையும் அவா் வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சதீஸ்குமாா், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) தையல்நாயகி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) விஜயலெட்சுமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் உலகநாதன், மாவட்ட நூலக அலுவலா் முத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.