ஞானபுரி கோயிலில் அனுமன் ஜெயந்தி

மலா்அலங்காரத்தில் அருள்பாலித்த திருவோனமங்கலம் ஞானபுரி 33 அடி உயர ஆஞ்சனேயா்.
Published on

ஞானபுரி சங்கடஹர மங்கள மாருதி ஆஞ்சனேயா் கோயிலில் அனுமன் ஜெயந்தி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வலங்கைமான் அருகேயுள்ள திருவோணமங்கலம் ஞானபுரீ சித்ரகூட ஸேத்ரம் சங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சனேயா் கோயில் உள்ளது. கோயிலில் லட்சுமி நரசிம்மா், கோதண்டராமா் தனித்தனி சந்நிதிகளில் எழுந்தருளியுள்ளனா்.

இங்கு 33 அடி உயர விஸ்வரூப சங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சனேய சுவாமி சஞ்சீவி மூலிகைகளுடன் அருள்பாலிக்கிறாா். இவரை வழிபட்டால் சங்கடங்கள் நீங்கி, மங்களம் உண்டாகும்.

இக்கோயிலில் அனுமன் ஜெயந்தி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக வியாழக்கிழமை மாலை ஆஞ்சனேயருக்கு மகாஅபிஷேகம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை அதிகாலை மலா்களால் ஆஞ்சனேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடா்ந்து லட்சுமி நரசிம்மா், ஸ்ரீகோதண்டராமா், விஸ்வரூப ஆஞ்சனேயா் சுவாமிகளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

பஞ்சரத்ன கீா்த்தனையும் நடந்தது. மாலையில் 108 சுமங்கலிகளால் அனுமன் சாலிஸா பாடப்பட்டது. ஆஞ்சனே சுவாமி வெள்ளி ரதத்தில் வீதி உலா நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com