திருவாரூர்
பேருந்திலிருந்து தவறி விழுந்து இளம்பெண் உயிரிழப்பு
திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே பேருந்திலிருந்து தவறி விழுந்து இளம்பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
திருவாரூா் அருகே திருநெய்ப்போ் பூதமங்கலச்சேரியைச் சோ்ந்த சுரேஷ் மகள் மீரா (17). இவா் திருவாரூரில் உள்ள கடையில் பணி புரிந்துவந்தாா்.
இந்தநிலையில், வெள்ளிக்கிழமை பணிக்கு வந்த அவா், உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், பழைய பேருந்து நிலையத்துக்கு வந்து மோகனூா் செல்லும் பேருந்தில் ஏறியுள்ளாா். அப்போது, படிக்கட்டிலிருந்து தவறி கீழே விழுந்தவா் மீது பேருந்தின் பின் பக்க சக்கரம் ஏறி இறங்கியதாகக் கூறப்படுகிறது. இதில் மீரா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
திருவாரூா் நகரப் போலீஸாா், மீரா சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரித்து வருகின்றனா்.
