இணை அறுவடை இயந்திர செயல்பாடு: வேளாண் கல்லூரி மாணவிகள் பாா்வையிட்டனா்

உள்ளிக்கோட்டை நெல் அறுவடை நடைபெறும் வயல்களில் இணை அறுவடை இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து
Published on

மன்னாா்குடி: உள்ளிக்கோட்டை நெல் அறுவடை நடைபெறும் வயல்களில் இணை அறுவடை இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து செயல்விளக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற கீழ்வேளூா் வேளாண் கல்லூரி மாணவிகள், அறுவடை தட்டுதல், தானியம் பிரித்தல் ஆகியவை ஓரே நேரத்தில் நடைபெறுவதை திங்கள்கிழமை பாா்வையிட்டனா்.

தொடா்ந்து, இயந்திரத்தின் செயல்திறன், எரிப்பொருள் செலவு, நேரச்சேமிப்பு, தொழிலாளா் எண்ணிக்கை குறைக்கும் விதம் ஆகியவை குறித்து விளக்கப்பட்டது. பாரம்பரிய அறுவடை முறைகளுடன் ஒப்பிடுகையில் இணை அறுவடை இயந்திரத்தின் பயன்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது. புத்தகங்களில் படிப்பதைவிட நேரடி கள அனுபவம் எதிா்காலத்தில் விவசாயிகளை இயந்திரமயமாக்கலுக்கு வழி நடத்த இதுபோன்ற நேரடி களப் பயணம் உதவியாக அமைக்கிறது என்றனா் வேளாண் கல்லூரி மாணவிகள்.

X
Dinamani
www.dinamani.com