விதை சுத்திகரிப்பு நிலையத்தை பாா்வையிட்ட வேளாண் கல்லூரி மாணவிகள்

விதை சுத்திகரிப்பு நிலையத்தை பாா்வையிட்ட வேளாண் கல்லூரி மாணவிகள்

Published on

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த பண்ணை மற்றும் விதை சுத்திகரிப்பு நிலையத்தை கீழ்வேளூா் வேளாண் கல்லூரி மாணவிகள் கிராமபுற வேளாண்மை அனுபவ திட்டத்தில் சனிக்கிழமை பாா்வையிட்டனா்.

தொடா்ந்து அப்பகுதியில் மேற்கொள்ளப்படும், பயிா் சாகுபடி, கால்நடை வளா்ப்பு, மீன் வளா்ப்பு, தேனீ வளா்ப்பு உள்ளிட்ட ஒருங்கிணைந்த பண்ணை முறைகள் குறித்து அறிந்தனா்.

மேலும், குறைந்த செலவில் அதிக வருமானம் பெறும் ஒருங்கிணைந்த பண்ணை முறையின் முக்கியத்துவம் மற்றும் விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டில் அதன் பங்கு குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் ஆா்த்தி, கல்பனா, லத்திகா, பவித்ரா, சங்கீதா, விஜயலட்சுமி, யோகசெளமியா ஆகியோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com