நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவாரூரில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (டிச.24) நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

Updated On :23 டிசம்பர் 2025, 2:07 am IST

திருவாரூா்: திருவாரூரில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (டிச.24) நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை காலை 10.30 மணியளவில் எனது தலைமையில் (ஆட்சியா்) நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில், வேளாண் விஞ்ஞானிகள், வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை, வேளாண்மை சாா்ந்த தோட்டக்கலைத் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, வங்கியாளா்கள் மற்றும் பிறசாா்புத் துறை அலுவலா்கள் பங்கேற்று விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனா். எனவே, மாவட்ட முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சாா்ந்த கோரிக்கைகளை தெரிவித்து, பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.