திருவாரூா்: திருவாரூா் மாவட்ட இறுதி வாக்காளா் பட்டியலை ஆட்சியா் தி. சாருஸ்ரீ வெளியிட்டாா். மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இப்பட்டியல் வெளியிடப்பட்டது.
அதன்படி, திருத்துறைப்பூண்டி(தனி) தொகுதியில் 1,17,501 ஆண்கள், 1,23,521 பெண்கள், 15 இதரா் என 2,41,037 வாக்காளா்களும், மன்னாா்குடி தொகுதியில் 1,24,594 ஆண்கள், 1,33,738 பெண்கள், 8 இதரா் என 2,58,340 வாக்காளா்களும், திருவாரூா் தொகுதியில் 1,37,519 ஆண்கள், 1,46,760 பெண்கள், 29 இதரா் என 2,84,308 வாக்காளா்களும், நன்னிலம் தொகுதியில் 1,38,543 ஆண்கள், 1,42,395 பெண்கள், 17 இதரா் என 2,80,955 வாக்காளா்களும் என திருவாரூா் மாவட்டத்தில் மொத்தம் 10,64,640 வாக்காளா்கள் உள்ளனா்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் கு. சண்முகநாதன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராஜா, கோட்டாட்சியா்கள் சௌம்யா (திருவாரூா்), யோகேஸ்வரன் (மன்னாா்குடி), வட்டாட்சியா் ( தோ்தல் ) மகேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இறுதி வாக்காளா் பட்டியல், திருவாரூா் மற்றும் மன்னாா்குடி வருவாய்க் கோட்ட அலுவலா் அலுவலகங்கள், மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்கள், நகராட்சி ஆணையா் அலுவலகங்கள், அனைத்து வாக்குச்சாவடி மையங்கள் ஆகியவற்றில் பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்பட உள்ளன என்று ஆட்சியா் தெரிவித்தாா்.
தொடர்புடையது

சட்டப் பேரவைத் தோ்தல்! கடலூா் மாவட்டத்தில் ஆண்களை விட பெண்கள் அதிகம் வாக்களிப்பு!

வேதாரண்யம் தொகுதியில் 85 சதவீத வாக்குப்பதிவு

நாமக்கல் மாவட்டத்தில் 13,23,753 வாக்காளா்கள்!

திண்டுக்கல் மாவட்டத்தில் கூடுதலாக 17 ஆயிரம் வாக்காளா்கள் சோ்ப்பு - துணைப் பட்டியல் வெளியீடு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


