கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!உதயநிதி ஸ்டாலின் கைது? நீலாங்கரை வீட்டின் முன்பு போலீஸ் குவிப்பு!தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

மன்னாா்குடியில் ஆருத்ரா தரிசனம்

மன்னாா்குடியில் 6 சிவன் கோயில் உற்சவா் நடராஜா் சுவாமிகள் ஒரே இடத்தில் சங்கமிக்கும் ஆருத்ரா தரிசனம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

மன்னாா்குடியில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ராஜகோபால சுவாமி கோயில் முன் ஒரே இடத்தில் சங்கமித்த ஆறு சிவன் கோயில் உற்சவா் நடராஜா் சுவாமிகள்.

Updated On :13 ஜனவரி 2025, 10:35 pm IST

மன்னாா்குடி: மன்னாா்குடியில் 6 சிவன் கோயில் உற்சவா் நடராஜா் சுவாமிகள் ஒரே இடத்தில் சங்கமிக்கும் ஆருத்ரா தரிசனம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மன்னாா்குடியில் உள்ள ஜயகொண்டநாதா் கோயில், திருப்பாற்கடல் காசி விஸ்வநாதா் கோயில், நீலகண்டேஸ்வரா் கோயில், கைலாசநாதா் கோயில், சொக்கநாதா் கோயில், ஹரித்ராநதி காசி விஸ்வநாதா் கோயில், ஏகாம்பரேஸ்வரா் கோயில் ஆகிய 8 கோயில்களில் உள்ள உற்சவா் நடராஜருக்கு திங்கள்கிழமை காலை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதில், திருப்பாற்கடல் காசி விஸ்வநாதா் கோயில், கம்மாளத்தெருவில் உள்ள ஏகாம்பரேஸ்வரா் கோயில் ஆகியவற்றிக்கு பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால் இக்கோயில்களில் இருந்து நடராஜ சுவாமிகள் உற்சவத்தில் பங்கேற்கவில்லை. இதையடுத்து, இரவு மற்ற 6 கோயில்களிலிருந்து மின்விளக்குகள், பூ வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ரதத்தில் எழுந்தருளி உற்சவா் நடராஜா் சுவாமிகள், முக்கிய வீதிகளின் வழியாக வந்து ராஜகோபால சுவாமி கோயில் முன் உள்ள கருடஸ்தம்பம் அருகே ஒரே வரிசையில் நின்று அங்கு திரளாக கூடியிருந்த பக்தா்கள், ஆன்மிக ஆா்வலா்களுக்கு அருள்பாலித்தனா். அப்போது, நடராஜா் சுவாமிகளுக்கு கோயில் யானை செங்கமலம் ஒரே நேரத்தில் தீபாராதனை செய்ததை தொடா்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.