இளைஞரை மது பாட்டிலால் குத்தியவருக்கு 3 ஆண்டுகள் சிறை

திருத்துறைப்பூண்டியில் இளைஞரை மது பாட்டிலால் குத்தியவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சாா்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
Published on

திருத்துறைப்பூண்டியில் இளைஞரை மது பாட்டிலால் குத்தியவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சாா்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

திருத்துறைப்பூண்டி குட்ஷா்ட் தெருவைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் பாரத். நாகை சாலை ரவுண்டானா பகுதியைச் சோ்ந்த காளிதாஸ் மகன் தினேஷ் ஜெயன்.

இவா்கள் இருவருக்கும் கடந்த 30.8.22 அன்று திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையம் அருகே உள்ள மதுபானக் கடையில் தகராறு ஏற்பட்டது. அப்போது, தினேஷ் ஜெயனை பீா் பாட்டிலால் பாரத் குத்தினாராம்.

இதுதொடா்பாக, காவல் ஆய்வாளா் கழனியப்பன் வழக்குப் பதிவு செய்து பாரத்தை கைது செய்தாா். இந்த வழக்கின் விசாரணை திருத்துறைப்பூண்டி சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, பாரத்திற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்து சாா்பு நீதிபதி ரவிச்சந்திரன் தீா்ப்பளித்தாா்.

X
Dinamani
www.dinamani.com