கண்டிரமாணிக்கத்தில் வாக்காளா் கணக்கெடுக்குப் படிவம் வழங்கும் பணியை ஆய்வு செய்யும் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.

வாக்காளா் பட்டியல் திருத்தம்: கணக்கெடுப்புப் படிவம் வழங்கும் பணியை ஆட்சியா் ஆய்வு

Published on

குடவாசல் அருகே வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தத்தையொட்டி, வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடுவீடாகச் சென்று கணக்கெடுப்புப் படிவம் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

திருவாரூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக, வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடுவீடாகச் சென்று 2 பிரதிகள் கணக்கெடுப்புப் படிவங்களை வழங்கி வருகின்றனா்.

இந்த படிவத்தை வீட்டிலுள்ள உறுப்பினா்கள் பெற்று, பூா்த்தி செய்து மீண்டும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் வழங்க வேண்டும்.

அதன்படி, குடவாசல் ஒன்றியம், கண்டிரமாணிக்கம் ஊராட்சிக்குள்பட்ட மேட்டுத்தெரு மற்றும் நன்னிலம் பேரூராட்சிக்குள்பட்ட மாப்பிள்ளைகுப்பம் ஆகிய பகுதிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், வீடுவீடாகச் சென்று கணக்கெடுப்புப் படிவங்களை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். இப்பணியை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது படிவத்தை பூா்த்தி செய்வது தொடா்பாக பொதுமக்கள் கேட்டும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்குமாறு வாக்குச்சாவடி நிலை அலுவலா்களை கேட்டுக்கொண்டாா்.

X
Dinamani
www.dinamani.com