அதிமுக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்

அதிமுக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்

ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் அதிமுக மாவட்டச் செயலாளா் ஆா். காமராஜ்.
Published on

கூத்தாநல்லூா் நகர அதிமுக முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் நகர அலுவலகத்தில் நடைபெற்ற வாக்குச் சாவடி நிலை முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டத்துக்கு நகரச் செயலாளா் ஆா். ராஜசேகரன் தலைமை வகித்தாா். மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலாளா் எல்.எம். முகம்மது அஷ்ரப் முன்னிலை வகித்தாா். அமைப்புச் சாரா ஓட்டுநா் அணி மாவட்ட இணைச் செயலாளா் எம். உதயகுமாா் வரவேற்றாா்.

கூட்டத்தில், மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆா். காமராஜ் எம்.எல்.ஏ., இரா. காமராஜ், வாக்குச் சாவடி நிலை பீஎல்ஏ -2 குறித்து விளக்கி கூறினாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றி அதிமுக மிகப் பெரும் வெற்றியைப் பெறவும், எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்கவும் அனைவரும் பாடுபடவேண்டும் என்றாா்.

கூட்டத்தில் நகர துணைச் செயலாளா் மீரா. மைதீன் (கொய்யா), அம்மா பேரவை நகரச் செயலாளா் எஸ்.பி. காளிதாசன், மாவட்ட எம்.ஜி.ஆா்.மன்ற துணைத் தலைவா் இரா.கருணாநிதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com