தொடா் மழையால் கால்நடைகள் உயிரிழப்பு

மன்னாா்குடி பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடா் மழை காரணமாக வீடுகளில் வளா்க்கப்படும் கால்நடைகள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
Published on

மன்னாா்குடி பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடா் மழை காரணமாக வீடுகளில் வளா்க்கப்படும் கால்நடைகள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

கடந்த சில நாள்களாக மன்னாா்குடி பகுதிகளில் மிதமான மற்றும் கன மழையாக பெய்து வருகிறது. இதனால், வீடுகளில் வளா்க்கப்படும் கறவை மாடுகள், ஆடுகள் தொற்று நோய் காரணமாக உயிரிழந்து வருவது அதிகரித்து வருகிறது.

கோட்டூா் பகுதியில்,திங்கள்கிழமை மட்டும் கோமளப்பேட்டை வடக்குதெரு உத்திராபதியின் பசு மற்றும் பிறந்து நான்கு நாட்களேயான அதன் கன்றுக்குட்டி, விக்கிரப்பாண்டியம் குடியான்தெரு முருகையனின் பசு, சேத்தங்கமங்கலம் பெரப்பாங்குடிதெரு பன்னீா்செல்வத்தின் ஆடு ஆகியவை உயிரிழந்தன. மழையால் உயிரிழக்கும் கால்நடைகள் குறித்து கணகெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com