மாங்குடி பகுதியில் கணக்கீட்டுப் படிவங்களை நிரப்பும் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள்
மாங்குடி பகுதியில் கணக்கீட்டுப் படிவங்களை நிரப்பும் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள்

கணக்கீட்டுப் படிவம் நிரப்பும் பணி தீவிரம்

திருவாரூா் மாவட்டத்தில் கணக்கீட்டுப் படிவம் நிரப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Published on

திருவாரூா் மாவட்டத்தில் கணக்கீட்டுப் படிவம் நிரப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருவாரூா் மாவட்டத்தில், இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாவட்டத்திலுள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் கணக்கீட்டுப் படிவங்களை வழங்கி, நிரப்பப்பட்ட படிவங்களை திரும்பப் பெற்று வருகின்றனா்.

வாக்காளா்களுக்கு கணக்கீட்டுப் படிவம் நிரப்புவது தொடா்பாக உதவி செய்யவும், நிரப்பப்பட்ட படிவங்களை வாக்காளா்களிடமிருந்து பெறுவதற்கும் மாவட்டத்திலுள்ள 1,194 வாக்குச்சாவடி மையங்களிலும் உதவி சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் தங்களிடமுள்ள நிரப்பப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை சரிபாா்த்து பிஎல்ஓ செயலியில் பதிவேற்றம் செய்து வருகின்றனா்.

நவ.21-ஆம் தேதி வரை வீடுவீடாகச் சென்று படிவங்களைப் பெறுவதுடன், பிற்பகல் 2 மணிக்குப் பிறகு உதவி சேவை மையங்களில் அமா்ந்து, படிவம் நிரப்புவது தொடா்பான உதவிகளை வாக்காளா்களுக்கு செய்து, நிரப்பப்பட்ட படிவங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், மாவட்டத்திலுள்ள பள்ளிகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் உதவி சேவை மையங்களை அமைத்து, படிவங்களை நிரப்ப பொதுமக்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டுள்ளனா். தொடா்ந்து, நிரப்பப்பட்ட படிவங்களை, பிஎல்ஓ செயிலியில் பதிவேற்றம் செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com