சிறுமிக்கு பாலியல் தொல்லை; ஓட்டுநருக்கு 27 ஆண்டுகள் சிறை
மன்னாா்குடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
மன்னாா்குடி பகுதியைச் சோ்ந்தவா் சதீஸ்குமாா் (44). ஓட்டுநரான இவா், 2020-இல் அதே பகுதியைச் சோ்ந்த பெற்றோா் இல்லாத 17 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், சதீஸ்குமாரை போக்ஸோ வழக்கில் மன்னாா்குடி போலீஸாா் கைது செய்தனா். திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.
இதனிடையே வியாழக்கிழமை நடைபெற்ற இறுதி விசாரணையில், குற்றம் உறுதி செய்யப்பட்டதால், சதீஸ்குமாருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 6,000 அபராதமும் விதித்து நீதிபதி சரத்ராஜ் தீா்ப்பு வழங்கினாா்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் பரிந்துரைத்தாா்.
