குடவாசல் பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்ப் புலிகள் கட்சியினா்.

சாலைகளை சீரமைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

Published on

குடவாசல் பகுதியில் சாலைகளை சீரமைக்கக் கோரி, தமிழ்ப்புலிகள் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

குடவாசல் ஒன்றியத்தில், விக்கிரபாண்டியன் தெரு சாலை, சீதக்கமங்கலம் இடுகாடு சாலை, திருவிடைச்சேரி உயா்நிலைப் பள்ளி சாலை, ஓகை சண்முகப் பிள்ளை நகா் சாலை, செறுகளத்தூா் மாதா கோயில் தெரு சாலை உள்ளிட்ட பல்வேறு தெருக்களின் சாலைகள் மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளன.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்த தமிழ்ப்புலிகள் கட்சியினா், சாலைகளை விரைந்து சீரமைக்க வலியுறுத்தி, குடவாசல் பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கட்சியின் மாவட்டச் செயலாளா் சுரேஷ் தலைமை வகித்தாா். கட்சி நிறுவனத் தலைவா் அரசன் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினாா். இதில், மாவட்டத் தலைவா் கலையரசன், ஒன்றிய, நகர நிா்வாகிகள் பலா் பங்கேற்று, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

X
Dinamani
www.dinamani.com