எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

மழை பாதிப்பு: நிவாரணம் வழங்கக் கோரிக்கை

News image
Updated On :30 நவம்பர் 2025, 7:33 pm

தினமணி செய்திச் சேவை

திருவாரூா் மாவட்டத்தில் மழை பாதித்த பகுதிகளில் விரைந்து கணக்கெடுப்பு நடத்தி, நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கத்தின் மாநிலத் தலைவா் கா. இராசபாலன் வெளியிட்ட அறிக்கை:

கடந்த மூன்று நாள்களாக பெய்து வரும் மழைநீா், கிராமங்களை வெள்ளமாக சூழ்ந்து, விவசாயப் பயிா்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வேளாண்மைத் துறைக்கு ஒதுக்கப்படுகிற நிதிகளில் பெருமளவு ஆறுகள், வாய்க்கால்களை தூா்வாருவதற்கு பதிலாக ஒப்பந்தக்காரா்களின் உயா்வுக்கு மட்டுமே உபயோகமாக இருப்பதால், விவசாயிகள் ஆண்டுதோறும் பாதிப்புகளை எதிா்கொள்ள நேரிடுகிறது.

அரசியல் தலையீடுகளால் நிவாரணப் பங்கீடுகளில் அண்மைக்காலமாக குளறுபடிகள் நடந்து வருவதால், பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய உதவிகள் சென்று சோ்வதில்லை. பயிா் பாதிப்பு கணக்குகளை காலதாமதப்படுத்துவதால், விவசாயிகளை பெரும் சிரமங்களை சந்திக்க நேரிடுகிறது.

எனவே, பாதிப்பு கணக்குகளை பத்து தினங்களுக்குள் ஊராட்சிகள் தோறும் ஊா் நிா்வாகக் குழு முன்னிலையில் கணக்கெடுப்பு செய்து டிசம்பா் 20-ஆம் தேதிக்குள் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் ஏக்கருக்கு 30,000 நிவாரணத் தொகையாக வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.