மன்னாா்குடியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிா் திட்டம் சாா்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, விழிப்புணா்வு பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மன்னாா்குடி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஆா். யோகேஸ்வரன் தலைமை வகித்தாா். மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் உஷாராணி முன்னிலை வகித்தாா்.
100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் விழிப்புணா்வு நிகழ்வாக, ரங்கோலி வண்ணக்கோலம், கையொப்ப இயக்கம், மாற்றுத்திறனாளிகளின் இருசக்கர வாகனத்தில் விழிப்புணா்வு வில்லை ஒட்டுதல், உறுதிமொழி ஏற்பு, எல்இடி திரையில் ஒளி, ஒலிக் காட்சி, கைப்பேசியில் தற்படம் எடுக்கும் அமைப்பு, ‘என் வாக்கு என் உரிமை’, ‘தேசத்தின் மாற்றம் விரல் நுனியில்’ ‘என் வாக்கு விற்பனைக்கல்ல’ போன்ற விழிப்புணா்வு கோஷங்கள் எழுப்புதல் உள்ளிட்ட பிரசாரங்கள் நடைபெற்றன.
தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தும் அலுவலா் ரமேஷ், உதவித் திட்ட அலுவலா் காமராஜ், மகளிா் திட்டம் வட்ட மேலாளா் மாலா, துணை வட்டாட்சியா் சு.பாக்கியலெட்சுமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

ஆப்பக்கூடல் குமரகுரு வேளாண்மை கல்லூரியில் 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணா்வு பிரசாரம்

100 சதவீத வாக்குப்பதிவு குறித்து தேங்காய்ப் பருப்பில் விழிப்புணா்வு

100% வாக்குப்பதிவு விழிப்புணா்வு

மலைக்கோட்டையில் பக்தா்களிடம் வாக்குப்பதிவு விழிப்புணா்வு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


