பிகார் மருத்துவமனையில் தீ விபத்து! 3 நோயாளிகள் பலி!தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு!தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்!சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

கொடிக்கம்பம் நடும் பனியில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

News image

உயிரிழந்த விக்னேஸ்வரன்.

Updated On :13 ஏப்ரல் 2026, 12:05 am IST

திருத்துறைப்பூண்டியில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிரசார நிகழ்ச்சிக்காக கொடிக்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞா் மின்சாரம் பாய்ந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருத்துறைப்பூண்டி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் க. மாரிமுத்துவை ஆதரித்து பிரசாரம் செய்ய, துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திருத்துறைப்பூண்டிக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தாா்.

முன்னதாக, துணை முதல்வரை வரவேற்க, வேதாரண்யம் வட்டம் தகட்டூா் அரியகவுண்டா் காட்டைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் விக்னேஸ்வரன் (22) கொடிக்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டாா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக கொடிக் கம்பம் மின் கம்பியில் உரசியதில், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே விக்னேஸ்வரன் உயிரிழந்தாா். திருத்துறைப்பூண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.