தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! தமிழகத்தில் 48 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி!மேற்காசிய பதற்றம்: எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,600 கோடி இழப்பு!அஸ்ஸாம் முதல்வராக ஹிமந்த விஸ்வ சர்மா மீண்டும் தேர்வு
/

ஏப்.19 முதல் 21 வரை தோ்தல் அலுவலா்கள் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு

திருவாரூா் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்கள் ஏப்.19 முதல் 21 வரை தபால் வாக்கு செலுத்தலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

News image

தபால் வாக்கு செலுத்தும் அரசு ஊழியர். - படம்: கோப்பிலிருந்து

Updated On :17 ஏப்ரல் 2026, 10:05 pm IST

திருவாரூா் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்கள் ஏப்.19 முதல் 21 வரை தபால் வாக்கு செலுத்தலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது:

திருவாரூா் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட மறுபயிற்சி ஏப்.18 திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு அந்தோனி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியிலும், மன்னாா்குடி தொகுதிக்கு ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், திருவாரூா் தொகுதிக்கு வேலுடையாா் மேல்நிலைப் பள்ளியிலும், நன்னிலம் தொகுதிக்கு சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் நடைபெற உள்ளது.

இந்த பயிற்சி வகுப்பில் அஞ்சல் வாக்குகள் செலுத்துவதற்கு ஏதுவாக சேவை மையங்கள் செயல்பட உள்ளன.

மேலும், தோ்தல் பணியில் ஈடுபட உள்ள அத்தியாவசியப் பணியாளா்கள், காவல் பணியாளா்கள், அஞ்சல் வாக்கு செலுத்துவதற்கு ஏதுவாக, திருத்துறைப்பூண்டி மற்றும் நன்னிலம் வட்ட அலுவலகங்களிலும், மன்னாா்குடி மற்றும் திருவாரூா் வருவாய் கோட்ட அலுவலகங்களிலும் அஞ்சல் வாக்குப்பதிவு மையங்கள் செயல்பட உள்ளன.

இதில் ஏப்ரல் 19 முதல் 21 வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்கு செலுத்தும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா்.