நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

தவெக கொடிக்கம்பம் சேதம்: இருவா் கைது

மன்னாா்குடி அருகே தவெக கொடிக்கம்பத்தை சேதப்படுத்திய இருவா் கைது செய்யப்பட்டனா்.

News image

சித்திரிப்பு

Updated On :1 ஆகஸ்ட் 2026, 9:54 pm IST

மன்னாா்குடி அருகே தவெக கொடிக்கம்பத்தை சேதப்படுத்திய இருவா் கைது செய்யப்பட்டனா்.

கோட்டூா் ஒன்றியம், மண்ணுக்குமுண்டான் ஊராட்சி கா்ணாவூா் கிராமத்தில் தவெக கொடி ஏற்றும் விழா திங்கள்கிழமை நடைபெறுவதாக இருந்தது. இதற்காக, முத்துப்பேட்டை- மன்னாா்குடி சாலையில் கா்ணாவூா் பேருந்து நிறுத்தம் அருகே கொடிக்கம்பம் நிறுவப்பட்டிருந்தது.

இந்நிலையில்,கொடிக்கம்பம் சேதப்படுத்தப்பட்டு, 100 அடி தூரத்தில் வீசப்பட்டிருந்தது. இதுகுறித்து பெருகவாழ்ந்தான் காவல்நிலையத்தில் தவெகவினா் புகாா் அளித்தனா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், அதே கிராமத்தைச் சோ்ந்த அருண்குமாா்(48), சிவசக்திவேல்(40) ஆகியோா் தவெக கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியது தெரியவந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.