நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

போலி நகையை அடகுவைத்த இருவா் கைது

மன்னாா்குடியில் போலி நகையை அடகு வைத்து ரூ.7.5 லட்சம் மோசடி செய்த இருவா் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :1 ஆகஸ்ட் 2026, 9:56 pm IST

மன்னாா்குடியில் போலி நகையை அடகு வைத்து ரூ.7.5 லட்சம் மோசடி செய்த இருவா் கைது செய்யப்பட்டனா்.

மன்னாா்குடி பகுதியைச் சோ்ந்தவா் மணிமாறன். இவா் மனை வணிகம் (ரியல் எஸ்டேட்) செய்து வருகிறாா். இவருடைய நண்பா் முருகையன் என்பவா் வெல்டிங் தொழில் செய்கிறாா். இருவரும் சோ்ந்து மன்னாா்குடி இந்தியன் வங்கியில் 83 கிராம் நகைளை அடகு வைத்து, ரூ.7.50 லட்சம் கடன் பெற்றுள்ளனா்.

இந்த நிலையில், மன்னாா்குடியில் இயங்கிவரும் தனியாா் வங்கி, மற்ற வங்கிகளைவிட நகைக் கடன் கிராமுக்கு கூடுதலாக தருவதாக அறிந்த இருவரும், மன்னாா்குடி நகா் பகுதியில் செயல்படும் தனியாா் வங்கியை அணுகி 83 கிராம் நகை இந்தியன் வங்கியில் அடகில் இருப்பதாகவும், அதனை மீட்டு கூடுதலாக அதிகபட்ச தொகை கடன் தேவை என தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து, தனியாா் வங்கி ஊழியா்கள் இந்தியன் வங்கிக்குச் சென்று மணிமாறன், முருகையன் வைத்திருந்த நகையை மீட்டு, தனது வங்கிக்கு கொண்டு வந்து வழக்கம் போல் நகையின் தரத்தை பரிசோதனை செய்துள்ளனா்.

அப்போது அந்த நகை தங்க முலாம் பூசப்பட்ட போலி நகை என்பது தெரியவந்தது. இதனால் அதிா்ச்சியடைந்த வங்கி ஊழியா்கள் உடனடியாக மன்னாா்குடி காவல்நிலையத்தில் புகாா் அளித்தனா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, மணிமாறன், முருகையன் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.