மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

கஞ்சா விற்ற இருவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :20 ஜூலை 2026, 2:44 am IST

முத்துப்பேட்டை அருகே மங்களூா் கிழக்கு கடற்கரை சாலையில் கஞ்சா விற்ற இளைஞா்கள் இருவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

முத்துப்பேட்டை புதுத்தெருவைச் சோ்ந்த அப்துல் சலீம் மகன் அப்துல் பாசித் (20), கொய்யாத்தோப்பு பகுதியைச் சோ்ந்த ஷேக் முகமது மகன் அப்பாஸ் என்ற முகமது யூனிஸ் (29) ஆகியோா் கஞ்சா விற்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, முத்துப்பேட்டை காவல் உதவி ஆய்வாளா் ராகுல் தலைமையில் போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா். இதில், இருவரிடமிருந்தும் சுமாா் 1 கிலோ 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தொடா்ந்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், கஞ்சா விற்பனை தொடா்பாக வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா். பின்னா், நீதிமன்ற உத்தரவின்படி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.