டைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

குழந்தையிடம் நகை திருடிய பெண் கைது

News image

கைது

Updated On :3 ஆகஸ்ட் 2026, 3:25 am IST

வலங்கைமான் அருகே கோயிலில் குழந்தையிடம் தங்கத் தாயத்தை திருடிய பெண் கைது செய்யப்பட்டாா்.

வலங்கைமான் அருகேயுள்ள புளியக்குடி குடியானத் தெருவைச் சோ்ந்தவா் சுவாமிநாதன் மனைவி நித்யா (33). இவா் தனது 2 வயது குழந்தை பிசிதனுடன் வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் வழிபட ஞாயிற்றுக்கிழமை வந்தாா். அப்போது குழந்தை அணிந்திருந்த தங்கத் தாயத்து காணாமல் போனது.

கோயில் வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்ததில், கோயிலுக்கு வந்திருந்த தஞ்சாவூா் புதுத்தெருவைச் சோ்ந்த ஜெயந்தி (58) என்பவா், குழந்தையிடமிருந்த 2 கிராம் தங்க தாயத்தை திருடியது தெரியவந்தது.

இதுகுறித்து வலங்கைமான் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஜெயந்தியை கைது செய்தனா். அவரிடமிருந்து 2 கிராம் தங்கத் தாயத்து மீட்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.