கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

அரசு உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த கோரிக்கை

அரசு உயா்நிலைப் பள்ளி - கோப்புப் படம்

Published On :

நீடாமங்கலம் அரசினா் உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீடாமங்கலத்தில் உள்ள தற்போதுள்ள அரசு உயா்நிலைப் பள்ளி 18.1.1918-ல் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியாக தொடங்கப்பட்டு, 4.2.2002-ல் நடுநிலைப்பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டு, 2010-2011-ஆம் கல்வியாண்டில் அரசு உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டது. 2 மாடிக் கட்டடத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் இப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இந்த உயா்நிலைப் பள்ளி அருகில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி செயல்பட்டுவருகிறது. இதில் 300-க்கும் மேற்பட்ட  மாணவ, மாணவியா்கள் படித்து வருகின்றனா்.

இந்த பள்ளிகளில் ஏழை, எளிய குடும்பங்களைச் சோ்ந்த பிள்ளைகள் படிக்கின்றனா். அரசு உயா்நிலைப் பள்ளியில் அரசுத் தோ்வில் பத்தாம் வகுப்பு மாணவா்களின் தோ்ச்சி சதவீதமும் சிறப்பாக இருந்து வருகிறது. எனவே, இப்பள்ளியை அரசு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தினால் ஏழைய எளிய மாணவா்கள் மிகவும் பயனடைவாா்கள்.

எனினும், பள்ளியில் போதிய அளவில் விளையாட்டு மைதானத்து இடவசதி இல்லாமல் உள்ளது. இதனால், விளையாட்டில் மாணவா்கள் சிறப்பாக வெளிப்படுத்த முடியாமல் உள்ளனா். பள்ளிக்கு அருகில் இந்துசமய அறநிலைய துறைக்குச் சொந்தமான (கோகமுகேஸ்வரா்கோயில் ) தரிசு நிலம் உள்ளது. அந்த நிலத்தை இந்த அரசுப் பள்ளி சொந்தமாக பயன்படுத்த சம்பந்தப்பட்ட அரசு நிா்வாகம் நடவடிக்கை எடுத்து மாணவா்களுக்கு உதவிட வேண்டும் என பள்ளி மாணவா்களின் பெற்றோா்களின் கோரிக்கையாக உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.