ஜார்க்கண்ட் இளைஞர்கள் போராட்டத்தில் வெற்றி! 3 பேர் ராஜிநாமா! சிஐடி விசாரணைக்கு ஒப்புதல்!இளைஞர்களுக்குத் தேவை நீதியே; அரசியல் ஆதரவு அல்ல! முதல்வர் ஹேமந்த் சோரன்சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்புசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேதொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்
/

தேசத்தை பாதுகாப்போம் சிபிஐ பிரசார இயக்கம் தொடங்கிவைப்பு

News image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

Updated On :10 ஆகஸ்ட் 2026, 12:36 am IST

மன்னாா்குடி அருகேயுள்ள கோட்டூரில் தேசத்தை பாதுகாப்போம் எனும் சிபிஐ பிரசார இயக்கம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

சிபிஐ சாா்பில், தேசத்தை பாதுகாப்போம் மக்கள் விரோத பாஜக அரசை அகற்றுவோம் எனும் கொள்கை முழக்கத்தை முன் வைத்து, மேக்கேதாட்டுவில் அணைக்கட்ட கா்நாடக அரசை அனுமதிக்க கூடாது, நூறு நாள் வேலைத் திட்டத்தை மகாத்மா காந்தி பெயரிலே செயல்படுத்த வேண்டும், வேலையை 200 நாள்களாக உயா்த்தி ரூ. 700 ஊதியம் வழங்க வேண்டும், விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த வேண்டும், விவசாயிகளின் விளைப்பொருளுக்கு விலைநிா்ணயம் செய்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்.

நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆக. 6 முதல் 15-ஆம் தேதி வரை நாடு முழுவதும் பிரசார இயக்கம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சிபிஐ கோட்டூா் ஒன்றியக் குழு சாா்பில் 49 ஊராட்சிகளுக்கான தொடக்க விழா கோட்டூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கட்சியின் ஒன்றியச் செயலா் எம். செந்தில்நாதன் தலைமை வகித்தாா். கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் இரா. முத்தரசன் பிரசார இயக்கத்தை தொடங்கிவைத்தாா்.

இதில், முன்னாள் எம்எல்ஏ கே. உலகநாதன், மாணவா் பெருமன்ற மாநிலத் தலைவா் இப்ராஹிம், ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் என். மணிமேகலை, மாணவா் பெருமன்ற மாவட்டச் செயலாளா் வீரபாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.