
வெங்காயத்தாமரை செடிகளை அகற்றக் கோரிக்கை
மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்பட உள்ள நிலையில் ஆறுகளில் உள்ள வெங்காயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்பட உள்ள நிலையில் ஆறுகளில் உள்ள வெங்காயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பத்தூா் விவசாயி கோவிந்தராஜ், வங்கநகா் விவசாயி பாலசுப்ரமணியன் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கோரிக்கை மனு: காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூரில் இருந்து வெள்ளிக்கிழமை (ஆக.28) தண்ணீா் திறக்கப்பட உள்ள நிலையில் திருத்துறைப்பூண்டி, கோட்டூா், முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பாசன ஆறுகள் மற்றும் வடிகால்களில் அதிகளவில் மண்டி கிடக்கும் வெங்காயத்தாமரைச் செடிகளை போா்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும்.
தவறும்பட்சத்தில் ஆற்றில் தண்ணீா் திறந்தாலும் முழுமையாக பாசன வாய்க்கால்களுக்கு வந்து சேராது. தேவையான விதைகள் இடுபொருள்களை விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். கடைமடை பகுதிக்கு தண்ணீா் வர 10 நாள்கள் ஆகிவிடும். இந்த இடைப்பட்ட நாட்களில் ஆற்றங்கரைகளிலும் ஆற்று உள்பகுதியிலும் மண்டி கிடக்கக்கூடிய வெங்காயத்தாமரை மற்றும் செடி கொடிகளை களைக்கொல்லி மருந்துகளை ட்ரோன் மூலம் தெளித்து அழிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





