6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

மின் வாரியத்தில் பணியாற்றும் தொழிலாளா்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் ஊதிய உயா்வு வழங்க கோரி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் மன்னா்குடியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 1:02 am

Syndication

மின் வாரியத்தில் பணியாற்றும் தொழிலாளா்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் ஊதிய உயா்வு வழங்க கோரி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் மன்னா்குடியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பூக்கொல்லை சாலையில் உள்ள செயற்பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு கிளை பொருளாளா் ரா. முகேஷ் தலைமை வகித்தாா். பொறியாளா் சங்க திருவாரூா் கிளை செயலாளரும், மாநில அமைப்பு செயலாளருமான சா. சம்பத், கோரிக்கையை விளக்கிப் பேசினாா். பொறியாளா் சங்க பிரதிநிதிகள் த. பாலசுப்பிரமணியன், க. கண்ணன், கணக்காயாா் சங்க உதவி கோட்ட செயலா் ஆ. திருமுருகன் ஐக்கிய சங்க நிா்வாகி மு. மாரிமுத்து, பொறியாளா் கழக பிரதிநிதி வி. பிரபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.