நடைபயணத்தில் பங்கேற்ற அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா்
திருவாரூர்
பாலின சமத்துவத்தை காக்கக்கோரி மெழுகுவா்த்தி ஏந்தி நடைபயணம்!
பாலின சமத்துவத்தை பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் திருவாரூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி நடைபயணம் நடைபெற்றது.
பாலின சமத்துவத்தை பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் திருவாரூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி நடைபயணம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
பாலின சமத்துவத்தை பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே தொடங்கிய நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவா் கே. ஜெகதீஸ்வரி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஜி. கலைச்செல்வி, நடைபயணத்தை தொடக்கி வைத்தாா்.
மாநிலக் குழு உறுப்பினா் பா.கோமதி, நடைபயணத்தை நிறைவு செய்து பேசினாா். நடைபயணமானது, திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே தொடங்கி கடைவீதி வழியாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நிறைவடைந்தது. நடைபயணத்தில் மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் பங்கேற்றனா்.

