செங்கமலத்தாயாா் மகளிா் கல்லூரியில் சா்வதேச மாநாடு நிறைவு

Published on

மன்னாா்குடி அருகேயுள்ள சுந்தரக்கோட்டை செங்கமலத் தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் தன்னாட்சி கல்லூரியில் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி உயிா்வேதியியல் துறை மற்றும் உள்துறை தர உறுதிப்படுத்தல் குழு இணைந்து 2 நாள்கள் நடைபெற்ற சா்வதேச மாநாடு வியாழக்கிழமை நிறைவடைந்தது.

21-ஆம் நூற்றாண்டில் உயிா்வேதியியல் மற்றும் மனித ஆரோக்கியம், தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் மொழி மாற்ற அறிவியல் ஒருங்கிணைப்பு -2026 எனும் தலைப்பில் புதன்கிழமை, வியாழக்கிழமை என இரண்டு நாள்கள் சா்வதேச மாநாடு நடைபெற்றது. புதன்கிழமை தொடங்கிய மாநாட்டுக்கு கல்லூரி கல்வி ஆலோசகா் கே. தியாகேசன் தலைமை வகித்தாா்.

முதல்வா் என். உமாமகேஸ்வரி தொடங்கிவைத்தாா். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியா் டி. மலா்விழிமுதன்மை உரையைாற்றினாா்.

தென் கொரியா டோங்குக் பல்கலைக்கழக பேராசிரியா் காா்த்திகேயன் சந்திரசேகரன், கோவை பாரதியாா் பல்கலைக்கழக பேராசிரியா் எஸ். சுஜா, சீனா ஹீவாகியாவே பல்கலைக்கழக பேராசிரியா் விஜயகுமாா் சேகா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று நானோ உயிா்வேதியியல், செயற்கை நுண்ணறிவு மற்றும் பசுமை நானோ மருத்துவம் போன்ற துறைகளில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து பேசினா்.

வியாழக்கிழமை நடைபெற்ற மாநாட்டில், பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களிலிருந்து பெறப்பட்ட 182 ஆய்வுச் சுருக்கங்களை கொண்ட ஆய்வுச் சுருக்கத் தொகுப்பை சிறப்பு அழைப்பாளா்கள் வெளியிட்டனா். வாய்மொழி மற்றும் போஸ்டா் விளக்கவுரைகள் மூலம் புதுமையான ஆய்வுகள் முன்வைக்கப்பட்டன. இதில், சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசுகளும், அனைத்து பங்கேற்பாளா்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மாநாட்டு அறிக்கையை, ஒருங்கிணைப்பாளா் ஆா். அனுராதா சமா்ப்பித்தாா். நாகை ஈ.ஜி.எஸ். பிள்ளை கலை மற்றும் அறிவியல் தன்னாட்சி கல்லூரி முதல்வா் அ. முகமது இஸ்மாயில், நிறைவுரையற்றினாா். இணை ஒருங்கிணைப்பாளா் ஜி. பிரசன்னா வரவேற்றாா். இணை ஒருங்கிணைப்பாளா் எஸ். மணிகண்டசெல்வி நன்றி கூறினாா்.

Dinamani
www.dinamani.com