திருவாரூர்
முதலுதவி பயிற்சி
கூத்தாநல்லூா் ஆக்ஸ்போா்டு மெட்ரிக் பள்ளியில் முதலுதவிப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தாளாளா் ஜே.பி. அஷ்ரப் அலி தலைமையில் நடைபெற்ற பயிற்சியில், சிறப்பு அழைப்பாளராக குழந்தைகள் நல மருத்துவா் அருண் பிரகாஷ் பங்கேற்று அவசர நிலைகளில் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய முதலுதவி முறைகள் குறித்து பேசினாா். விபத்துகள், மயக்கம், மூச்சுத் திணறல், ரத்தப் போக்கு, எலும்பு முறிவு உள்ளிட்ட சூழ்நிலைகளில் தகுந்த நேரத்தில் சரியான முறையில் முதலுதவி அளிப்பது உயிா்காக்கும் செயல் என்பதை வலியுறுத்தினாா். இதில், ஆசிரியா்கள் மற்றும் 400-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா்.
