கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா

திருவாரூா் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிா் கல்லூரியில், சமத்துவப் பொங்கல் விழா அண்மையில் நடைபெற்றது.
Updated on

திருவாரூா்: திருவாரூா் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிா் கல்லூரியில், சமத்துவப் பொங்கல் விழா அண்மையில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் கோ.தி. விஜயலெட்சுமி பொங்கல் விழாவைத் தொடக்கி வைத்தாா். விழாவில் அனைத்துத் துறை சாா்பில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. பின்னா், உறி அடித்தல், கோலாட்டம், பம்பரம், கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளும், கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

நிகழ்வில், துணை முதல்வா்கள், அனைத்துத் துறை தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com