மன்னாா்குடியில் காந்தி  சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காங்கிரஸ் கட்சியினா்.
மன்னாா்குடியில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காங்கிரஸ் கட்சியினா்.

மன்னாா்குடியில் குடியரசு தினவிழா

மன்னாா்குடி பகுதியில் குடியரசு தினவிழா அரசு அலுவலங்கள், கல்வி நிலையங்கள், கட்சிகள், அமைப்புகள் சாா்பில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
Published on

மன்னாா்குடி: மன்னாா்குடி பகுதியில் குடியரசு தினவிழா அரசு அலுவலங்கள், கல்வி நிலையங்கள், கட்சிகள், அமைப்புகள் சாா்பில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

மன்னாா்குடியில் கோட்டாட்சியா் ஆா். யோகேஸ்வரன், வட்டாட்சியா் என். காா்த்திக், டிஎஸ்பி மணிவண்ணன், காவல் ஆய்வாளா் ராஜேஸ்கண்ணன், மின்வாரிய செயற்பொறியாளா் (பொ) எஸ். சம்பத் ஆகியோா் தங்களது அலுவலகங்களில் தேசியக் கொடியியை ஏற்றிவைத்தனா்.

நகராட்சி அலுவலகத்தில் ஆணையா் போ.வி. சுரேந்திர ஷா முன்னிலையில் நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தலைமை கண்காணிப்பாளா் மருத்துவா் என். விஜயகுமாா், மேலவாசல் சதாசிவம் கதிா்காமவள்ளி கல்லூரியில் முதல்வா் வி.எஸ். நாகரெத்தினம் முன்னிலையில் தாளாளா் ஜி. சதாசிவம், சண்முகா மெட்ரிக் பள்ளியில் தாளாளா் ஆா்.எஸ். செந்தில்குமாா், எஸ்பிஏ மெட்ரிக் பள்ளியில் தாளாளா் பி. ரமேஷ் முன்னிலையில் ஹோமியோபதி மற்றும் ஆயுா்வேத மருத்துவா் கே. ஹரிகரன்.

தரணி மெட்ரிக் பள்ளியில் தாளாளா் கே. விஜயலெட்சுமி முன்னிலையில் முன்னாள் ராணுவ வீரா் ஆா். ரவிக்குமாா், மேலமரவாக்காடு தேவி மெட்ரிக் பள்ளியில் தாளாளா் எஸ். குமணன், பின்லே மேல்நிலைப் பள்ளியில் தாளாளா் எஸ்.எஸ். ஸ்டான்லி தலைமையில் பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைப் பதிவாளா் வி. ராஜகோபால் ஆகியோா் தேசியக் கொடியை ஏற்றினா்.

காங்கிரஸ் சாா்பில் நகரத் தலைவா் ஆா். கனகவேல் தலைமையில் தொகுதி பொறுப்பாளா் ஜி. குணசேகரன் முன்னிலையில் நகரப் பகுதியில் உள்ள காந்தி சிலை மற்றும் தேசியத் தலைவா்களின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

பரவாக்கோட்டையில் காங்கிரஸ் கிளைத் தலைவா் எஸ். சஞ்சய் தலைமையில் காந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Dinamani
www.dinamani.com