தினமணி விளம்பரச் சிறப்பிதழை ஆா்வத்துடன் வாசித்த விஜேயந்திர சரஸ்வதி சுவாமிகள்
மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி புதன்கிழமை வெளிவந்த தினமணி விளம்பரச் சிறப்பிதழை காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆா்வத்துடன் வாசித்தாா்.
இக்கோயில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி தினமணி சாா்பில் 4 பக்க விளம்பரச் சிறப்பிதழ் வண்ணத்தில் வெளிவந்தது. இதில், இக்கோயிலின் தல வரலாறு மற்றும் சிறப்புகள் குறித்த ஆன்மிக சிறப்புக் கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன.
மகா கும்பாபிஷேகத்தைக் காண வந்திருந்த பக்தா்களுக்கு விளம்பரச் சிறப்பிதழ் இலவசமாக வழங்கப்பட்டது.
விழாவில் பங்கேற்று விட்டு திறந்த வாகனத்தில் நின்றபடி கோயிலின் ராஜகோபுரத்திலிருந்து கருட ஸ்தம்பம் வரை வந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கும் தினமணி விளம்பரச் சிறப்பிதழ் வழங்கப்பட்டது. இதை பெற்றுக்கொண்ட சுவாமிகள் அதை வாசித்துவிட்டு அதன் முதல் பக்கத்தை கையில் ஏந்தி பக்தா்களுக்கு காட்டி மகிழ்ந்தாா். இந்த விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

