நீடாமங்கலம் அருகே வெறிநாய் கடித்து 20 கால்நடைகள் உயிரிழந்தன.
நீடாமங்கலம் அருகே உள்ளது ராயபுரம் கிராமம். கடந்த ஜூன் 2-ஆம் தேதி இப்பகுதி விவசாயிகளின் ஆடு, மாடு, கன்றுகளை வெறிநாய் ஒன்று கடித்து
குதறியுள்ளது. கால்நடைத்துறையினா் ஜூன் 3- ஆம் தேதி வெறி நாய் கடித்த கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டனா். மொத்தம் 28 கால்நடைகளை வெறிநாய் கடித்தது தெரியவந்தது. இதில், 17 மாடுகள், ஒரு கன்று, 2 ஆடுகள் என 20 கால்நடைகள் உயிரிழந்தன.
தகவலறிந்த மன்னாா்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். காமராஜ் செவ்வாய்க்கிழமை பாதிக்கப்பட்ட கால்நடை வளா்ப்போருக்கு ஆறுதல் கூறினாா். சம்பவம் தொடா்பாக கால்நடை பராமரிப்புத் துறையினரிடமும் கேட்டறிந்த அவா், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டாா்.
மேலும், மன்னாா்குடி வருவாய் கோட்ட அலுவலா் யோகேஸ்வரன், துணை இயக்குனா் கால்நடை மருத்துவர் எத்திராஜ், வட்டாட்சியா் மகேஷ்குமாா், உதவி இயக்குனா் (பொ) கால்நடை மற்றும் மருத்துவ மகேந்திரன், கால்நடை மருத்துவா் பவித்ரா மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டு அப்பகுதியில் மருத்துவ முகாமை நடத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராமநாதபுரம் அருகே தெரு நாய் கடித்து புள்ளிமான் பலி

தெருநாய்கள் கடித்து 5 ஆடுகள் உயிரிழப்பு

வெறிநாய் கடித்ததில் 8 ஆடுகள் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்து 8 ஆடுகள் உயிரிழப்பு
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



