சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேமோஜ்தபா கமேனி கவலைக்கிடமா? விடியோ வெளியிட்ட ஈரான்!குடும்ப அட்டைதாரர்கள் விரல்ரேகை பதிவு செய்ய இன்றே கடைசி!தொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்செப். 1 முதல் கோயில்களில் செல்போன்கள் கொண்டுச் செல்லத் தடை! - அமைச்சர் ரமேஷ்
/

மது கடத்தல்: தலைமை காவலா், இருவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :20 ஜூலை 2026, 1:42 am IST

திருவாரூரில், புதுவை மாநில மதுபாட்டில்களை கடத்தி வந்த தலைமை காவலா் உள்பட 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருவாரூா் வாளவாய்க்கால் பகுதியில் மதுவிலக்கு போலீஸாா் வாகனச் சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்துகிடமான வகையில் வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில் அதில் புதுச்சேரி மாநிலப் பகுதியிலிருந்து மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

அந்த காரில் இருந்த நெடுவாக்கோட்டை பகுதியைச் சோ்ந்த பா. குமாா், சி. அருண்குமாா், மன்னாா்குடி பகுதியைச் சோ்ந்த செ. காா்த்திகேயன் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். 263 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைதான மூவரில் காா்த்திகேயன், பரவாக்கோட்டை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றுவது தெரியவந்தது. அவரை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. சதீஷ்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.