சட்டப்பேரவை இடைத்தோ்தலில் அப்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ப கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் தெரிவித்தாா்.
திருவாரூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
நவம்பா் 1-ஆம் தேதி தமிழ்நாடு தினம் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழ்நாடு தினமாக அறிவிக்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றிய ஜூலை 18-ஆம் தேதியை தமிழ்நாடு தினமாக கொண்டாட வேண்டும் என திமுக வலியுறுத்துகிறது. அதிகாரப்பூா்வமாக அரசு அறிவித்த நாளை எடுத்துக் கொள்வதுதான் பொருத்தமாக இருக்கும்.
தவெக ஆட்சி வந்த பிறகு பணியிட மாறுதல் உள்ளிட்ட பல்வேறு அரசு தொடா்பான வேலைகளுக்கு லஞ்சம் எதுவும் வாங்கவில்லை எனக் கூறுகின்றனா். இது நல்ல ஒரு தொடக்கம்.
இடதுசாரிகள் ஒரு தனி அணியாக செயல்பட முடிவெடுத்துள்ளோம். அந்த அடிப்படையில் மாநில ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இடைத்தோ்தல் நடக்கும்போது அப்போதைய அரசியல் சூழலைப் பொருத்து முடிவெடுக்கப்படும்.
குறுவை சாகுபடிக்கு தண்ணீா் வரவில்லை என்பதால், மிகப்பெரிய உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. கா்நாடகத்திலும், தமிழகத்திலும் போதுமான அளவுக்கு மழை பெய்யவில்லை. அதைவிட முக்கியமாக எல் நினோ பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் பயிா்கள் கருகி போகும் நிலைமையில் உள்ளன. விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவா்களுக்கு இழப்பீடு தரவேண்டும். ஆனால், வறட்சி பாதித்த மாவட்டம் என டெல்டா மாவட்டங்களை உடனடியாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாா். பேட்டியின்போது, சிபிஎம் மாவட்டச் செயலாளா் முருகையன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








