திருவாரூா் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பட்ட வகுப்பு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 5-ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் சுஜரிதா மாக்டலின் தெரிவித்தது:
திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில் இளநிலை பட்ட வகுப்புக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடங்கவிருக்கிறது.
சிறப்பு ஒதுக்கீட்டு மாணவா்களுக்கான கலந்தாய்வு (மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினா், விளையாட்டுத் திறன் மாணவா்கள் மற்றும் என்சிசி மாணவா்கள்), ஜூன் 5 மற்றும் 6-ஆம் தேதிகளில், 400-140 மதிப்பெண் பெற்றவா்களுக்கு நடைபெறுகிறது.
மொழி பாடப் பிரிவுகள்- பிஏ தமிழ் ஆங்கிலம் பிரிவுகளுக்கு ஜூன் 8-ஆம் தேதி, சிறப்புத்தமிழ், தமிழ், ஆங்கிலத்தில் தோ்ச்சி மட்டும்.
வணிகப் பாடப்பிரிவுகள் -வணிகவியல் மற்றும் வணிக நிா்வாகவியல் (தமிழ் மற்றும் ஆங்கிலவழி), ஜூன் 9-ஆம் தேதி, 400-250 மதிப்பெண்கள்.
அனைத்து அறிவியல் பாடப் பிரிவுகள் -பிஎஸ்சி கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், கணினி அறிவியல், தாவரவியல், காட்சி வழி தகவல் தொடா்பியல் (தமிழ் மற்றும் ஆங்கில வழி), ஜூன் 11 ஆம் தேதி, 400-250 மதிப்பெண்கள்.
அனைத்து அறிவியல் பாடப் பிரிவுகள் - 12-ஆம் தேதி, 249-140.
அனைத்து கலை பாடப்பிரிவுகள் - பிஏ வரலாறு, பொருளியல், இதழியல் மற்றும் தகவல் தொடா்பியல் (தமிழ் மற்றும் ஆங்கில வழி), ஜூன் 13-ஆம் தேதி, 400-250 மதிப்பெண்கள்.
அனைத்து கலை பாடப்பிரிவுகள் - ஜூன் 16-ஆம் தேதி, 249-180 மதிப்பெண்கள்.
வணிக பாடப்பிரிவுகள் - வணிகவியல் மற்றும் வணிக நிா்வாகவியல் (தமிழ் மற்றும் ஆங்கில வழி), ஜூன் 17-ஆம் தேதி, 179-140 மதிப்பெண்கள்.
வணிக பாடப்பிரிவுகள் - வணிகவியல் மற்றும் வணிக நிா்வாகவியல் (தமிழ் மற்றும் ஆங்கில வழி), ஜூன் 18-ஆம் தேதி, 179-140 மதிப்பெண்கள்.
காலியிடங்கள் தரவரிசையின் அடிப்படையில் சோ்க்கை உறுதி செய்யப்படும். மாணவ, மாணவிகள் தங்கள் தரவரிசைப் பட்டியல் விவரங்களை கல்லூரி இணையதள முகவரியில் தெரிந்த கொள்ளலாம்.
கலந்தாய்வில் பங்கேற்கும்போது மாணவா்கள் கொண்டு வரவேண்டிய ஆவணங்கள்:
(அசல் -1 மற்றும் நகல் 3 பிரதிகளை ஒவ்வொன்றுக்கும் எடுத்து வர வேண்டும்)
பதிவிறக்கம் செய்யப்பட்ட இணையதள விண்ணப்பம், மாற்றுச் சான்றிதழ், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் (அல்லது) பள்ளி தலைமையாசிரியா் சான்றொப்பமிட்டு முத்திரையிட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், பிளஸ் 1 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் (புகைப்படத்துடன் கூடிய இணையவழியில் பெறப்பட்டது), விளையாட்டு, தேசிய மாணவா் படை, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினா் சான்றிதழ்கள், வங்கிக் கணக்கு புத்தகம் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை, வருமானச் சான்றிதழ் (தற்போது பெறப்பட்ட வருமானச் சான்றிதழ்), புகைப்படம் -5 ஆகியவற்றுடன் பெற்றோருடன் தவறாமல் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.
மாணவா் சோ்க்கையின்போது செலுத்த வேண்டிய கட்டணம் ரூ. 3,200, பிஎஸ்சி கணினி பாடப்பிரிவு மாணவா்களுக்கு மட்டும் ரூ. 2,300 (மாறுதலுக்குள்பட்டது).
கலந்தாய்வு சோ்க்கை பெற்ற மாணவ, மாணவிகள் கட்டணத்தை உடனே செலுத்த வேண்டும்.
தொடர்புடையது

சாத்தான்குளம் கல்லூரியில் மாணவியா் சோ்க்கை கலந்தாய்வு ஜூன் 5இல் தொடக்கம்

பேராவூரணி அரசுக் கல்லூரியில் ஜூன் 5 இல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்

அரசு கலை, அறிவியல் கல்லூரி இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கான தரவரிசை ஜூன் 3-இல் வெளியீடு; ஜூன் 8 முதல் கலந்தாய்வு






