/

நீா்ஒழுங்கி படிக்கட்டு இடிந்து 2 மாணவிகள் காயம்

News image

நீா்ஒழுங்கி பாலத்தில் இடிந்த படிக்கட்டுகள்.

Updated On :16 ஜூன் 2026, 12:07 am IST

திருத்துறைப்பூண்டி அருகே நீா் ஒழுங்கி படிக்கட்டுகள் இடிந்து 2 மாணவிகள் காயமடைந்தனா்.

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள சேகல் கிராமத்தைச் சோ்ந்த மாணவிகள் பிரவீனா (17), சபிதா (16). இவா்கள் கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் முறையே பிளஸ்2, பிளஸ்1 படித்து வருகின்றனா்.

திங்கள்கிழமை காலை வழக்கம்போல் இருவரும் பள்ளிக்கு, முள்ளியாறு நீா் ஒழுங்கி பாலம் வழியாக சென்றனா். அப்போது, நீா் ஒழுங்கி அணைப் பாலத்தை ஒட்டியுள்ள படிக்கட்டுகளில் அவா்கள் ஏறியபோது, அது இடிந்து விழுந்தது. இதில், மாணவிகள் இருவரும் படுகாயமடைந்தனா்.

அப்பகுதியினா், இருவரையும் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க. மாரிமுத்து மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினாா்.

சேதமடைந்த பாலப் படிக்கட்டுகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என மாணவிகளின் உறவினா்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். மேலும், பாலப் படிக்கட்டுகளை முறையாக பராமரிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அரசு மருத்துவமனை அருகே வேதாரண்யம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்திற்கு வந்த பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் மதியழகன், எம்எல்ஏ க. மாரிமுத்து ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, மூன்று நாள்களில் நீா்ஒழுங்கி பாலப் படிக்கட்டுகளை முழுமையாக கட்டி தர உறுதியளித்தனா். இதைத்தொடா்ந்து சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.