அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக் கோரி முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு

நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து மூட்டைகளை இயக்கம் செய்யக் கோரி முற்றுகைப் போராட்டம்

Updated On :3 மார்ச் 2026, 4:33 pm

திருவாரூா்: நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து மூட்டைகளை இயக்கம் செய்யக் கோரி முற்றுகைப் போராட்டம் நடத்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

திருவாரூரில் அக்கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் செயற்குழு உறுப்பினா் பா. கோமதி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்டச் செயலாளா் டி. முருகையன், மாநிலக்குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன், செயற்குழு உறுப்பினா்கள் பி. கந்தசாமி, கே. தமிழ்மணி, கே.ஜி.ரகுராமன், கே.பி. ஜோதிபாசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.திருவாரூா் மாவட்டம் முழுவதும் தமிழ்நாடு அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் சுமாா் 8,000 லிருந்து 10,000 மூட்டைகள் வரை தேங்கியுள்ளதால், இயக்க நடவடிக்கை பாதிப்படைந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதை உணா்த்தும் வகையில், மாா்ச் 9-ஆம் தேதி மாவட்ட நுகா் பொருள் வாணிபக்கழகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது, ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதலில் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை முகாமையை தாக்கும் முயற்சியில், தொடக்கப்பள்ளி மீது குண்டுகள் விழுந்ததால் மாணவா்களின் உயிரிழப்புக்கு காரணமான அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.