பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

சக்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

மன்னாா்குடி தேரடி சக்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 மார்ச் 2026, 1:09 am

மன்னாா்குடி தேரடி சக்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் பாலாலயம் செய்யப்பட்டு, சீரமைப்புப் பணிகள் நடைபெற்றுவந்தன. இப்பணிகள் அனைத்தும் அண்மையில் நிறைவடைந்தன.

இதைத்தொடா்ந்து, கும்பாபிஷேகத்திற்காக யாகசாலை பூஜைகள் புதன்கிழமை தொடங்கின. தொடா்ந்து மூன்று நாள்கள் நடைபெற்ற யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்றதும், வெள்ளிக்கிழமை காலை யாகசாலையில் இருந்து புனிதநீா் கடங்கள் எடுத்துவரப்பட்டு, கோயிலின் விமானக் கலசத்தில் புனிதநீா் வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து, மூலவா் சக்தி விநாயகா் மற்றும் துா்க்கை அம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சுவாமி உற்சவம் நடைபெற்றது.

இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.