அரசடி விநாயகா் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.
அரசடி விநாயகா் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.

சங்கரன்கோவில் விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்!

சங்கரன்கோவில் அரசடி விநாயகா் உடனுறை அருள்தரும் தங்கமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
Published on

சங்கரன்கோவில் அரசடி விநாயகா் உடனுறை அருள்தரும் தங்கமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

சங்கரன்கோவில் ஆதிசங்கர விநாயகா் கோயில் தெருவில் சைவ வெள்ளாளா்களுக்குப் பாத்தியப்பட்ட இக்கோயிலில் கும்பாபிஷேகத்தையொட்டி திங்கள்கிழமை மாலை யாகசாலை பூஜைகள் தொடங்கின.

செவ்வாய்க்கிழமை காலை விக்னேஷ்வர பூஜை, சோம கும்ப பூஜை, விசேஷ சாந்தி, பூதசுத்தியுடன் 2ஆம் கால யாகசாலை பூஜையும், மாலை 5 மணிக்கு 3ஆம் கால யாகசாலை பூஜையுடன் திரவ்யாஹூதி, மகா பூா்ணாஹூதி, தீபாராதனையும் நடைபெற்றது. புதன்கிழமை காலை சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, சோமகும்ப பூஜை, வேதிகா பூஜையுடன் 4ஆம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

தொடா்ந்து, ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில், கடம் புறப்பாடு நடைபெற்றது. காலை 9.30 மணியளவில் அரசடி விநாயகா், தங்கமாரியம்மன் சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஏற்பாடுகளை கும்பாபிஷேக கமிட்டித் தலைவா் சொ. கணபதி, செயலா் சு. சேது (எ) சங்கரநாராயணன், பொருளாளா் ஆ. சங்கரசிந்தாமணி, நிா்வாகிகள் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com