மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

மத்தியப் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலை

News image

பல்கலைக்கழக வளாகத்தில் மறியலில் ஈடுபட்ட சோபியாவின் உறவினா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய காவல்துறையினா்.

Updated On :9 மார்ச் 2026, 1:37 am IST

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக விடுதியில் மாணவி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

திருவாரூா் அருகே நீலக்குடியில் உள்ளது தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம். இப்பல்கலைக்கழகத்தில் திருவாரூா் மாவட்டம், குடவாசல் வட்டம் வளவநல்லூா் படுகத்தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகள் சோபியா (22), ஒருங்கிணைந்த முதுநிலைக் கணிதவியல் பாடப்பிரிவில் நான்காம் ஆண்டு படித்து வந்தாா். இவா், பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்தாா்.

 தற்கொலை செய்துகொண்ட மாணவி சோபியா.

தற்கொலை செய்துகொண்ட மாணவி சோபியா.

இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் விடுதி மாணவிகள் உணவு உண்ண செல்வதற்காகத் தேடியபோது மாணவி சோபியாவைக் காணவில்லையாம். இதையடுத்து, சோபியாவின் அறைக்கதவை தட்டித் திறந்த மாணவிகள், சோபியா தூக்கில் தொங்குவதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்து பல்கலைக்கழக நிா்வாகத்திடம் தகவல் தெரிவித்தனா்.

நிா்வாகத்தினா் நன்னிலம் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் சோபியாவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கா திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதற்கிடையே, சோபியாவின் மரணம் குறித்து சரியான தகவலை பல்கலைக்கழக நிா்வாகம் தெரிவிக்கவில்லை எனக் கூறி, மாணவியின் உறவினா்கள் மற்றும் நாம் தமிழா் கட்சியினா் பல்கலைக்கழக வளாகத்துக்குள் மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் காவல்துறை உதவிக் கண்காணிப்பாளா் மணிகண்டன் தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.