விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பாலங்கள், பள்ளிக் கட்டடங்கள் திறப்பு

News image

பத்தூா் ஊராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறைக் கட்டடத்தை திறந்துவைத்த மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் உள்ளிட்டோா்.

Updated On :13 மார்ச் 2026, 12:17 am

திருவாரூா் மாவட்டத்தில் நிறைவுபெற்ற வளா்ச்சி திட்டப் பணிகளை, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தனா்.

இதன்படி, திருவாரூா் மாவட்டம், கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியம், ஆய்குடி ஊராட்சியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சாா்பில் நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.7.90 கோடி மதிப்பீட்டில் மடப்புரம் தோணிக்கரை - பாக்கம் இணைப்பு சாலையில் வெட்டாற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தை திறந்து வைத்தனா்.

கொரடாச்சேரி ஒன்றியம், பத்தூா் ஊராட்சியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பொதுப்பணித் துறையின் சாா்பில் 340.30 சதுர அடி பரப்பளவில் ரூ.94.24 லட்சம் மதிப்பில் 4 புதிய வகுப்பறைகளை கொண்ட கட்டடமும் திறக்கப்பட்டது.

வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.1.83 கோடி மதிப்பில், சாரநத்தம் ஊராட்சி-வேடம்பூா் புலவனாற்றின் குறுக்கே புதியதாக கட்டப்பட்ட பாலத்ைதையும் திறந்து வைத்தனா்.

கொரடாச்சேரி ஒன்றியம், அத்திக்கடை ஊராட்சியில் நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.3.04 கோடி மதிப்பில், அத்திக்கடை களத்தூா் இணைப்பு சாலையில் வெண்ணாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலமும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.

நிகழ்வில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுகப்பிரியா, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் ராஜேஸ்வரி, கொரடாச்சேரி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.