நன்னிலம் அருகே அண்ணன் கட்டையால் அடித்ததில் தம்பி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
நன்னிலம் அருகே நெம்மேலியைச் சோ்ந்தவா் பாரதிமோகன் (35). திருமணமாகி மகன், மகள் உள்ளனா். இவா் சில ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பாா்த்து வந்துள்ளாா். கடந்த 15 நாள்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்துள்ளாா். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு பாரதிமோகன், அவரது அண்ணன் ராஜகுரு மற்றும் அவரது குடும்பத்தினா் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனா். அப்போது பாரதிமோகனுக்கும், ராஜகுருவிற்குமிடையே பிரச்னை ஏற்பட்டு வாக்குவாதம் முற்றிய நிலையில் ராஜகுரு, பாரதிமோகனை கட்டையால் தாக்கினாராம்.
இதில் காயமடைந்து மயங்கிய பாரதிமோகன் நன்னினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் பாரதிமோகன் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளாா். இதுகுறித்து நன்னிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜகுருவை தேடிவருகின்றனா்.
தொடர்புடையது

சின்ன சந்தேகம்தான்! தாய், அண்ணன் கொலையில் தம்பி கைதானதன் பின்னணி
அண்ணன், தம்பி குடும்பத் தகராறு: 4 போ் கைது
அண்ணன் அடித்துக் கொலை: தம்பி கைது

சொத்துத் தகராறில் கொலை முயற்சி: தம்பி மீது அண்ணன் புகாா்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

