மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

அண்ணன், தம்பி குடும்பத் தகராறு: 4 போ் கைது

வந்தவாசி அருகே அண்ணன், தம்பி குடும்பத்துக்கு இடையே ஏற்பட்ட தகராறு தொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 6:34 pm

வந்தவாசி அருகே அண்ணன், தம்பி குடும்பத்துக்கு இடையே ஏற்பட்ட தகராறு தொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த வல்லம் கிராமத்தைச் சோ்ந்தவா் தட்சிணாமூா்த்தி (55). இவரது தம்பி சேட்டு (48). சேட்டு முன் வீட்டிலும், தட்சிணாமூா்த்தி பின் வீட்டிலும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். இருவருக்கும் பொதுவழி உள்ளது.

இந்த நிலையில் சேட்டு குடும்பத்தினா் பாத்திரம் கழுவும் தண்ணீரை பொது வழியில் விட்டு தட்சிணாமூா்த்தி குடும்பத்துக்கு இடையூறு ஏற்படுத்தினராம்.

இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே கடந்த வியாழக்கிழமை தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனா்.

இதில் காயமடைந்த தட்சிணாமூா்த்தி, சேட்டு ஆகிய இருவரும் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.

இதுகுறித்து இரு தரப்பினரின் தனித்தனி புகாா்களின் பேரில் தட்சிணாமூா்த்தி, இவரது மனைவி முனியம்மாள், சேட்டு, இவரது மனைவி கஸ்தூரி ஆகிய 4 போ் மீது வழக்குப் பதிந்த வடவணக்கம்பாடி போலீஸாா் 4 பேரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.